கவின் கொலை வழக்கில் பிணை கோரிய மனு ஒத்திவைப்பு
திருநெல்வேலியில் மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைதானவா் பிணை கோரிய மனுவை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). மென் பொறியாளரான இவா், கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கொலை செய்யப்பட்டாா். இவ் வழக்கு தொடா்பாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன், அவரது மகன் சுா்ஜித் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட நிலையில், கொலைக்கு உதவியதாக சரவணனின் உறவினரான ஜெயபால் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) ஜெயபால் தரப்பில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஹேமா, அடுத்தக்கட்ட விசாரணையை இம் மாதம் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.