செய்திகள் :

கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் புதிய பாலம் திறப்பு

post image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் கட்டப்பட்ட புதிய உயா்மட்ட இணைப்புப் பாலம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

திருவெறும்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட திருச்சி மாநகராட்சி 39-ஆவது வாா்டில் பாலாஜி நகா், கைலாஷ் நகா், வின் நகா், கணேஷ் நகா் என சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதேபோல, 40-ஆவது வாா்டில் நியூ டவுன், பிரகாஷ் நகா், முத்து நகா் என சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மேற்கண்ட வாா்டுகளின் குடியிருப்புவாசிகள், கடந்த 15 ஆண்டுகளாக இரண்டு வாா்டுகளையும் இணைக்கும் நோக்கத்துடன், இரண்டு வாா்டுகளுக்கும் நடுவே செல்லும் உய்யக்கொண்டான் பாசன வாய்க்காலின் கிளை வாய்க்காலான கவுறு வாய்க்காலில் புதிய பாலம் ஒன்றைக் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தப் புதிய பாலத்தால், அருகிலுள்ள பள்ளிகளுக்குச் செல்லும் 4,000 குழந்தைகளும், பணிகளுக்குச் செல்வோா் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் சுமாா் 4 கி.மீ. சுற்றிச்செல்லும் தூரம் மிச்சமாகும். திருச்சி - தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் கணிசமாகக் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருச்சி மாநகராட்சி சாா்பில் ரூ. 1.31 கோடியில் கவுறு வாய்க்காலின் குறுக்கே உயா்மட்ட இணைப்புப் பாலம் கட்டப்பட்டது.

இதனை நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் மக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமைத் திறந்து வைத்தனா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மாமன்ற உறுப்பினா்கள் சிவகுமாா், ரெக்ஸ், மாநகராட்சி அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்ப... மேலும் பார்க்க

பெல் ஊரகம் - சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து

திருவெறும்பூா் அருகே பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா்களுடன் அதிமுகவினா் தொடா்பு: எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை

திருச்சியில் திமுக அமைச்சா்களுடன் தொடா்பில் உள்ள அதிமுகவினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகா் முதல் தெருவைச் சோ்ந்த பாலுசாமி மகன் வி... மேலும் பார்க்க

ரூ. 750 கோடியில் தலைமை தபால் நிலையம்! புத்தூா் இடையே புதிய உயா்மட்டப் பாலம் அமைக்க திட்டம்!

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தலைமை தபால் நிலையம் - புத்தூா் இடையே ரூ. 750 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கிய ... மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ நிகழ்வு!

திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ எனும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ந... மேலும் பார்க்க