செய்திகள் :

காசா: போரில் பிறந்த குழந்தைக்கு 'Singapore' எனப் பெயர் - நெகிழ வைக்கும் காரணம்

post image

காசாவில் போருக்கு நடுவே பிறந்த பெண் குழந்தைக்கு 'சிங்கப்பூர்' எனப் பெயர் வைத்துள்ளனர் பாலஸ்தீனிய தம்பதி. இதற்கான காரணம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.

சிங்கப்பூர் ஊடகமான Straits Times வெளியிட்டுள்ள செய்தியறிக்கையின்படி, கடந்த அக்டோபர் 16ம் தேதி பிறந்த அந்தப் பெண் குழந்தைதான் நாட்டிலேயே இந்தப் பெயர் சூட்டப்படும் முதல் குழந்தை.

காசா
காசா

அவரின் தந்தை, ஹம்தான் ஹதாத், லவ் எய்ட் சிங்கப்பூர் (Love Aid Singapore) என்ற அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு சூப் கிச்சனில் சமையல்காரராகப் பணிபுரிகிறார். இந்த அறக்கட்டளை இரண்டு ஆண்டுகளாக வடக்கு மற்றும் தெற்கு காசாவில் சமைத்த உணவுகளை வழங்கி வருகிறது.

இந்த அறக்கட்டளையை நடத்தும் சிங்கப்பூரைச் சேர்ந்த செயற்பாட்டாளர் கில்பர்ட் கோ தெரிவித்திருப்பதன்படி, கர்ப்ப காலத்தில் ஹம்தாத்தின் மனைவி அறக்கட்டளையின் சமையலறை உணவையே முழுமையாக நம்பியிருந்துள்ளார். காசா முழுவதும் இஸ்ரேல் ராணுவத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம் தலைவிரித்தாடுகையிலும் அவருக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மகளுக்கு சிங்கப்பூர் எனப் பெயரிட்டுள்ளனர்.

சிங்கப்பூர் மக்களை தான் மிகவும் நேசிப்பதகாவும் அதனால் தன் மகளுக்கு இந்த பெயரை வைத்துள்ளதாகவும் ஹமத் கூறியிருக்கிறார். குழந்தை சிங்கப்பூர் இப்போது ஒரு கூடாரத்தில் வசித்து வருகிறார்.

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை இணையத்தில் பகிர்ந்துள்ளது லவ் எய்ட் சிங்கப்பூர். இது அறக்கட்டளைக்கும் அதன் பணியாளர்களுக்கும் இடையிலான பிணைப்பைக் காட்டுவதாக அந்தப் பதிவில் கூறியுள்ளனர்.

மேலும், "மனிதாபிமானத்தின் சரியான பக்கத்தில் நின்றதற்காக சிங்கப்பூர் மக்களுக்கு நன்றி. லவ் எய்ட் சிங்கப்பூரில் மனிதத்துக்கு இனம், மதம் மற்றும் எல்லைகள் கிடையாது" என்றும் பதிவிட்டுள்ளனர்.

எவரெஸ்ட் 'Death Zone'-ல் தவித்த ஆஸ்திரேலியப் பெண் - உடல் சொல்வதை அலட்சியப்படுத்தாதீர்!

இலக்கு முக்கியமா? உயிர் முக்கியமா? எவரெஸ்ட் சிகரம் ஒவ்வொரு ஆண்டும் கேட்கும் கேள்வி இதுதான்! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி பியான்கா அட்லர் (Bianca Adler), இந்த ஆண்டு மே மாதம் அந்தப் பரீட்சைய... மேலும் பார்க்க

`அந்த கார் கலரை எம்.ஜி.ஆர் கலர் என்றே சொல்வார்கள்’ - புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பயன்படுத்தி, ஏறக்குறைய கடந்த 25 ஆண்டுகளாக அவரின் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பாசிடர் கார், தற்போது சி.கே. ஆட்டோமொபைல் பெயிண்டிங் வர்க்ஷாப்பின் துணையுடன் புது... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: மகளின் ஸ்கூட்டர் கனவு; சாக்குமூட்டையில் சில்லறை; நெகிழ வைத்த விவசாயி

சத்தீஷ்கரில் விவசாயி ஒருவர் தனது மகளின் கனவை நிறைவேற்ற செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அங்குள்ள ஜஸ்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பஜ்ரங் ராம். இவரது மகள் சம்பா பகத்.இவர் விவசாயியான தனது த... மேலும் பார்க்க

புனே கோட்டையில் நமாஸ் செய்ததாகப் பரவிய வீடியோ; கோட்டை முழுதும் கோமியம் தெளித்த பாஜக MPக்கு எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனே சனிவார்வாடாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை 1732 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். மகாராஷ்டிராவின் கலாசார நகரமான புனேயில் இருக்கும் இந்தச் சனிவார்வாடா கோட்டை மராத்... மேலும் பார்க்க