காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை! 8 பேர் கைது!
காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புது வண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (33). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். மனைவி பெங்களூரில் வசித்து வருகிறார்.
வினோத் மட்டும் தனது பெற்றோர்களுடன் வடசென்னையில் வசித்து வருகிறார். இவர் மீன்பிடித் தொழில் செய்தும் காவல் துறையினருக்கு குற்ற சம்பவம் குறித்து தகவல் கொடுப்பவராகும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பொங்கல் நாளை முன்னிட்டு வினோத் மது போதையில் தனிமையில் இருந்தபோது, முன் விரோதம் காரணமாக 8 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி வினோத்தை வெட்டிக் கொலை செய்து தனது பகையை தீர்த்துக் கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இதையும் படிக்க: காற்றின் தரத்தில் நெல்லை முதலிடம்!
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் மீன்பிடித் துறைமுக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்
தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் ராயபுரம் உதவி ஆணையர் ராஜ் பால் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்துவந்து பலியான வினோத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
வட சென்னை போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்புடைய 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.