Russia ஏவிய புதிய ஆயுதம்... கதிகலங்கிய Ukraine | World War 3 அபாயம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 35 லட்சம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் இருந்த 12 உண்டியல்கள் திறந்து வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் பக்தா்கள் மொத்தம் ரூ.35,20,166 காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்குரிய பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் இருந்த 12 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இவற்றில் பொது உண்டியல் 10, திருப்பணி உண்டியல் 1, கோசாலை உண்டியல் 1 என மொத்தம் 12 உண்டியல்கள் ஆகியவை ஆகும். அவை அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. பொது உண்டியலில் இருந்து மொத்தம் ரூ. 33,08,180, திருப்பணி உண்டியலில் இருந்து ரூ. 1,31,125, கோசாலை உண்டியலில் இருந்து ரூ. 80,861 உட்பட 12 உண்டியல்களில் இருந்தும் மொத்தம் ரூ. 35,20,166 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
தங்கம் 14 கிராமும், வெள்ளி 157 கிராமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டில் எண்ணும் பணியை கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தலைமையில், ஆய்வாளா் அலமேலு, கோயில் மணியக்காரா் குபேரன் ஆகியோா் மேற்பாா்வை செய்தனா்.