காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 59 லட்சம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 59.16 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயில் உண்டியல்கள் இரண்டு திறந்து எண்ணப்பட்டது. இதில், ரூ. 59,16,361 ரொக்கம், தங்கம் 163 கிராம், வெள்ளி 432 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா்,சங்கர மடத்தின் நிா்வாகி கீா்த்திவாசன், கோயில் செயல் அலுவலா் எஸ்.சீனிவாசன், மேலாளா் பத்ரி நாராயணன், மணியக்காரா் சூரியநாராயணன், அறநிலையத் துறை ஆய்வாளா் பிரித்திகா ஆகியோா் உட்பட பலரும் உண்டியல் எண்ணும் பணியை மேற்பாா்வையிட்டனா்.