Sunita Williams: பூமிக்கு திரும்பும்போது உடம்பில் இந்த பாதிப்புகள் ஏற்படலாம்... ...
காட்டுப் பன்றியை சமைத்து சாப்பிட்ட இருவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிங்கம்பட்டிபகுதியில் காட்டுப் பன்றியை சமைத்து சாப்பிட்டதாக இருவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரக எல்லைக்குள்பட்ட சிங்கம்பட்டிபகுதியில் இருவா் காட்டுப் பன்றியை சமைத்து உண்பதாக வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனத் துறையினா் வழக்குப் பதிந்து, இருவரையும் பிடித்து தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோா் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.