செய்திகள் :

காட்டு யானை தாக்கி தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலி!

post image

கூடலூர்: காட்டு யானை தாக்கியதில் தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலியான சம்பவம் பரபரப்பை எழுப்பியுள்ளது.

கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் மசினகுடி தபால் அலுவலகத்தில் தபால் பட்டுவடா செய்யும் பணியில் உள்ளார்.

வழக்கம்போல நேற்று(ஏப். 22) பணி முடித்து மாலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் பொக்காபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வரும் வழியில் திடீரென வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று சாலைக்கு வந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்த இவர்களை விரட்டியுள்ளது. அப்போது குமார் தனது இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு மனைவியையும் இழுத்துக் கொண்டு ஓடியபோது சாலையில் தடுமாறி கீழே விழுந்த சரஸ்வதியை யானை தாக்கியுள்ளது.

அப்போது அந்த வழியாக ஜீப்பில் வந்தவர்கள் யானையை விரட்டி சரஸ்வதியை மீட்டு மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி இரவு சுமார் 9.30 மணியளவில் சரஸ்வதி பலியானர். இந்த சம்பவம் தொடர்பாக மசினகுடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

நான் முதல்வர் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசின் 'நான் முதல்வன்... மேலும் பார்க்க

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம த... மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வு: இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியானது!

குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. அந்த வகையில்,... மேலும் பார்க்க

போப் இறுதிச் சடங்கு: அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பங்கேற்பு!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்!

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.வருகின்ற ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்ப... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 70% மின் கட்டணம் உயர்வு: இபிஎஸ்

கடந்த 4 ஆண்டுகளில் 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை ... மேலும் பார்க்க