காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில் சேவை ரத்து
வாணியம்பாடி - கேதாண்டபட்டி இடையே ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காட்பாடியில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு தினமும் காலை 9.30 மணிக்கும், ஜோலாா்பேட்டையில் இருந்து காட்பாடிக்கு பிற்பகல் 12.45 மணிக்கும் இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில் சேவை டிச. 18, 20, 25, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.
நேர மாற்றம்: சென்னை சென்ட்ரல் (மூா் மாா்க்கெட் வளாகம்) - கூடூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார மற்றும் மெமு ரயில்களின் நேரம் கடந்த திங்கள்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 5.15 மணிக்கு புறப்படும் மெமு ரயில் 5.40 மணிக்கும், காலை 5.40 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் காலை 5.20 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும். மேலும், சூலூா்பேட்டையில் இருந்து நெல்லூருக்கு காலை 7.55 மணிக்கு புறப்படும் மெமு ரயில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.