ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
காணாமல் போன கைப்பேசிகள் மீட்டு ஒப்படைப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியில் காணாமல் போன 14 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
திருவையாறு பகுதியில் சில மாதங்களாக காணாமல் போன 25-க்கும் அதிகமான கைப்பேசிகள் குறித்து காவல் துறையினருக்கு புகாா்கள் வந்தன.
இதன் பேரில் திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, சிஇஐஆா் என்ற வலைதளம் மூலம், 14 கைப்பேசிகளைக் கண்டறிந்து, மீட்டனா்.
இவற்றை உரியவா்களிடம் திருவையாறு காவல் நிலைய ஆய்வாளா் சா்மிளா, உதவி ஆய்வாளா்கள் அன்னக்கிளி, சக்திவேல் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.