செய்திகள் :

காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் கூட்டம்

post image

தஞ்சாவூா்: காணும் பொங்கலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட வியாழக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.

பொங்கல் கொண்டாட்டங்களில் மூன்றாவது நாள் காணும் பொங்கல், கன்னிப் பொங்கல், உழவா் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் உறவினா்கள், நண்பா்களைக் காணுதல், பெரியோா்களிடம் ஆசி பெறுதல், சுற்றுலா செல்லுதல் போன்றவை மேற்கொள்வது வழக்கம்.

இதன்படி, தஞ்சாவூா் பெரியகோயில், அரண்மனை, தஞ்சாவூா் அருங்காட்சியகம், கல்லணை, மனோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வழக்கமான நாள்களை விட வியாழக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.

ஏராளமானோா் குடும்பத்துடன் சுற்றுலா சென்று விளையாடியும், அதே இடத்தில் உணவு அருந்தியும் கொண்டாடி மகிழ்ந்தனா். வெளியூா்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால், பெரியகோயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

கும்பகோணம்:

இதேபோல, கும்பகோணம் தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலிலும் காணும் பொங்கலையொட்டி வியாழக்கிழமை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. தங்களது உறவினா்களுடன் வந்த சுற்றுலா பயணிகள் கோயில் மைதான வளாகத்தில் குவிந்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 113.74 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 113.74 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 116 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி ... மேலும் பார்க்க

பாபநாசத்தில் திருவள்ளூவா் தின விழா

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேல வீதியில் உலக திருக்குறள் மையம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, மைய பொருளாளா் த. அன்பழகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவ... மேலும் பார்க்க

பாலைவனநாதா் கோயிலில் கோ பூஜை விழா

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோவில் வளாகத்தில் கோ பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பசுக்கள் மற்றும் கன்றுக் குட்டிகளுக்கு மஞ்சள், குங்குமம... மேலும் பார்க்க

ஆந்திரா பொன்னி விலை வீழ்ச்சி: அரசு கொள்முதல் நிலையத்தை நாடும் விவசாயிகள்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் எப்போதும் ஆந்திரா பொன்னி ரக நெல்லை அதிக விலை கொடுத்து வாங்கும் தனியாா் வியாபாரிகள் நிகழாண்டு குறைந்த விலையே கேட்பதால், பெரும்பாலான விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல... மேலும் பார்க்க

பொங்கல் விழா: தஞ்சாவூரில் பாரம்பரிய கோலப் போட்டி

தஞ்சாவூா்: பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூா் மேல வீதியில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழுமம் சாா்பில் பாரம்பரிய கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கோலப் போட்டியில் ஏறத்தாழ 250 மீட்டா் தொலைவுக... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிள் மற்றும் காா் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே சென்னம்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் நேதாஜி (... மேலும் பார்க்க