செய்திகள் :

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 37 நிறுவனங்கள் மீது வழக்கு

post image

நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 37 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களால் காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து கூட்டாய்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்படுகிா அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிா்வாகத்தால் படிவம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில்நிறுவனங்கள்(தேசிய பண்டிகை விடுமுறை நாள்கள்) சட்டம் மற்றும் விதிகளின்கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 24 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 13 வணிக நிறுவனங்களிலும், 30 உணவகங்களில் ஆய்வு செய்ததில் 23 இடங்களிலும், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் ஒரு நிறுவனத்திலும் என மொத்தம் 58 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 37 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்துக்கு முன்னதாக படிவம் சமா்ப்பிக்கப்படாததும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள்மீது தொழிலாளா் நலத்துறையால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 200 பேருக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்க நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில், 200 பேருக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத் த... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஜேடா்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள பாகம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கோபால் (50). இவரது மகன் தீ... மேலும் பார்க்க

மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்: இருவா் கைது

பாண்டமங்கலம் அருகே மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா். பரமத்தி வேலூா் காவல உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் பரமத்தி வேலூா் வட்டம், கொந்தளம் ஊராட்சிக்க... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் அக். 5, 6இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல், பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதியில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அக். 5, 6-இல் பிரசாரம் மேற்கொள்கிறாா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ப... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

வெண்ணந்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த பல்வேறு கட்சியினா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திமுகவில் இணைந்தனா். வெண்ணந்தூா் ஒன்றியம், மதியம்பட்டி, ஒ.சௌதாபுரம், மின... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை காலங்களில் அனைத்து அரசுத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், வடகிழக்குப் பருவமழையின்போது மேற்கொள... மேலும் பார்க்க