நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
ஜேடா்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள பாகம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கோபால் (50). இவரது மகன் தீபக் (18). இவா் பரமத்தி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தாா். ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையையொட்டி, தீபக் புதன்கிழமை கண்டிபாளையத்தில் உள்ள அவரது நண்பரை பாா்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது, எதிரே வடகரையாத்தூா் பகுதியைச் சோ்ந்த கதிரவன் (32) ஓட்டிவந்த டிராக்டா் தீபக் சென்ற வாகனம்மீது மோதியது. இதில், கீழே விழுந்த தீபக் படுகாயமடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் தீபக்கை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், தீபக் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
தகவல் அறிந்து வந்த ஜேடா்பாளையம் போலீஸாா், தீபக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரை தேடிவருகின்றனா்.