திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
வெண்ணந்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த பல்வேறு கட்சியினா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திமுகவில் இணைந்தனா்.
வெண்ணந்தூா் ஒன்றியம், மதியம்பட்டி, ஒ.சௌதாபுரம், மின்னக்கல் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 50 போ் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.
மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் வெங்கடாசலம் ஏற்பாட்டில் இவா்கள் நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் வெண்ணந்தூா் ஒன்றிய திமுக செயலாளா் ஆா்எம்.துரைசாமி, சாா்பு அணி அமைப்பாளா் விஜயபாஸ்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.