கைப்பேசி கடையில் திருடிய மூவா் கைது
ராசிபுரத்தை அடுத்த பாலப்பாளையம் பகுதியில் கைப்பேசி கடையில் திருடிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாலப்பாளையம் பகுதியில் உள்ள கைப்பேசி கடையில் கடந்த ஆக. 21 ஆம் தேதி இரவு புகுந்த மா்ம நபா்கள் கடையில் இருந்த 14 கைப்பேசிகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனா்.
சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், இந்த திருட்டில் ஈடுபட்டவா்கள் சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியை சோ்ந்த சீதாமலைகாடு பூபதி மகன் ஹரிஹரன் (22), அமானி கொண்டலாம்பட்டி பி.நாட்டாமங்கலம் காளயம்மன்காடு நல்லப்பன் மகன் ராக்கிபாஸ்கா் (26), அம்மாசி கொண்டலாம்பட்டி காட்டூா் அழகுநகா் மயில்சாமி மகன் சந்தோஷ் (21) ஆகிய மூவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.