கரூா் நெரிசலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
ராசிபுரம் கரிரல் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வெண்ணந்தூா் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பேரூா் செயலாளா் க.நடராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் சேலம், நாமக்கல் மண்டல துணைச் செயலாளர்ர வ.அரசன், ஒன்றியப் பொருளாளா் பழ.செங்கோட்டுவேல், நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளா் கதிா்வேந்தன், மகளிா் விடுதலை இயக்கம் கஸ்தூரி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் சு.காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில் உயிரிழந்தவா்களின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதேபோல ராசிபுரம் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், கட்சியின் நகர துணைச் செயலா் இள.விஜயகுமாா் தலைமை வகித்தாா். கட்சியின் சேலம், நாமக்கல் மண்டல துணைச் செயலாளா் வ.அரசன், நாடாளுமன்றத் தொகுதி செயலாளா் கபிலன், நகரச் செயலாளா் சுகுவளவன் உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.