செய்திகள் :

காரைக்குடியில் அரசுப் பேருந்து-பால் வாகனம் மோதல்: 3 பேர் பலி!

post image

காரைக்குடி அருகே அரசுப் பேருந்தும் பால் வாகனமும் இன்று அதிகாலையில் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வாகனமும் நேருக்கு நேர் மோதியது.

இதில் பால் வாகனத்தில் பயணித்த ஆறுமுகம், கருணா தமிழ்பாண்டியன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பால் வாகனத்தை ஓட்டி வந்த ரூபன், அரசு பேருந்து ஓட்டுநர் நாகராஜ், நடத்துநர் செல்வேந்திர பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் பயணித்த பயணிகளில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 4 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாலை சுமார் 3 மணி அளவில் நடந்த இச்சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து படுகொலை!

தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் மிதமான மழை!

தமிழகத்தில் மே 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர்... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் தங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில், இன்று காலை வர... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது: தொல். திருமாவளவன்

சிதம்பரம்: அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மா... மேலும் பார்க்க

மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்கு சவக்குழிக்குச் சென்ற சட்டம் - ஒழுங்கே சாட்சி! - இபிஎஸ் கடும் விமரிசனம்!

முதல்வர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமரிசித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தொடர் கொலைகள்- ஜாதிய மோ... மேலும் பார்க்க

ஊடகத்துறையினருடன் சந்திப்பு.. தயங்காமல் விமர்சியுங்கள், பாராட்டுங்கள் - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்! எனவே, தயங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார... மேலும் பார்க்க