அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி திண்டுக்கல், மதுரை, தேனி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 6, 2025
முன்னதாக, தென்மேற்குப் பருவமழையானது வருகிற மே 13 ஆம் தேதியே தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வழக்கமாக மே இறுதி வாரத்தில் அந்தமான் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் நிலையில், இந்தாண்டு இரண்டு வாரங்கள் முன்னதாகவே தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.