செய்திகள் :

'ஸ்டாலின் மாடல் ஆட்சி; சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி'- எடப்பாடி விமர்சனம்

post image

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' என்று ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்நிலையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, 'நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி'! என்று திமுகவை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தொடர் கொலைகள்- சாதிய மோதல்கள்!நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி! ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வந்த சில செய்திகள்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி சரண்யா மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை.

திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பம் அருகே கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலம் கண்டுபிடிப்பு.

வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை -கரூர் மாவட்டம் குளித்தலையில் கோயில் திருவிழாவில் மதுபோதை ஆட்டத்தை தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு ஜாதி தரப்பினர் இடையே மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு; பேருந்து கண்ணாடி உடைப்பு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு.

நாளையோடு திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சராசரி நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு இன்றைய ஒரு நாளின் செய்திகளே சாட்சி.

ஒவ்வொரு நாளும் இப்படி கொலைகளுக்கு, கலவரங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் இடையில் தான் நாம் வாழ்கிறோம்.

ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் அக்கறை இல்லாதவராய், நாலாண்டு கழிந்து விட்டது என நாளை ஒரு வீடியோஷூட் எடுத்துக்கொண்டு திரு. ஸ்டாலின் வருவார் பாருங்களேன்.

"The Dictator" எனும் ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

'எனது ஆட்சியில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நடக்கவில்லை' என்று சட்டப்பேரவையில் சொன்னவர், இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது.

'ஆக, குற்றவாளிகள் கைது' என்று சொல்வீர்களே- அதையாவது செய்து, சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் .

எனது அருமை தமிழ்நாட்டு மக்களே- இனியும் இந்த ஸ்டாலின் மாடல் அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை; இன்னும் ஓராண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள். 2026-ல் #ByeByeStalinஎன்று சொல்லப்போகும் உங்களின் தீர்ப்பு மூலம் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்.

தமிழ்நாடு உங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான அமைதிப்பூங்காவாக மீண்டும் திகழும் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அண்ணாமலை இன்னும்..." - திருமாவளவன்

ஈரோட்டில் நான்கு நாள்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறது.இவ்வாறிருக்க, இச்சம்பவத்தின்... மேலும் பார்க்க

`சண்டையிடுவதில் எந்த பலனும் இல்லை..!’ - மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விரும்பும் இளவரசர் ஹாரி

பிரிட்டன் இளவரசர் ஹாரி பிபிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தனது மனைவி, குழந்தைகளுடன் மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விருப்பம் தெரிவித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.பிரிட்டன் மன்னர் சார்லஸ்க்க... மேலும் பார்க்க

'ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்; அடிமைக் கட்சியல்ல திமுக!' - முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், "நம் உயிருடன் கலந்திருக்... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் இருக்கிறோமா... வேறு எங்காவது இருக்கிறோமா?' - நயினார் நாகேந்திரன் காட்டம்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை பாஜக அலுவலகத்தில் புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது... மேலும் பார்க்க

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: அவிழாத முடிச்சுகள்; ஓராண்டாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த ஆண்டு மே 2-ம் தேதி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்... மேலும் பார்க்க

India - Pakistan: அமெரிக்கா, சீனா, மலேசியா... போர் ஏற்பட்டால் உலக நாடுகள் யார் பக்கம்? | Explained

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த விரிசல் போராக உருவெடுக்குமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இரண்டு நாடுகளும் ... மேலும் பார்க்க