விராட் கோலி இன்னும் 2 சதங்கள் அடிப்பார்; முன்னாள் இந்திய வீரர் நம்பிக்கை!
கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து 6 பேர் பலி!
கர்நாடகத்தில் கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கர்நாடகத்தில் நெலமங்கலத்தில், சனிக்கிழமை (டிச. 21) நெடுஞ்சாலை 48-ல் சென்று கொண்டிருந்த கார் மீது சரக்கு லாரி ஒன்று மோதியது.
காரின் மீது சரக்கு லாரி கவிழ்ந்ததில், காரினுள்ளே இருந்த 6 பேரும் பலியாகினர். இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியதுடன், உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த விபத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரக்கு லாரியின் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க:முன்னாள் தலைமைக் காவலர் வீட்டில் 40 கிலோ வெள்ளி, ரூ.2.85 கோடி ரொக்கம் பறிமுதல்!