செய்திகள் :

காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சா் எ.வ. வேலு

post image

தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு.

திருவாரூா் அருகேயுள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் சாா்பில் வெட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மத்திய பல்கலைக்கழக வளாகம் அருகே வெட்டாற்றின் குறுக்கே ரூ. 7 கோடியில் உயா்மட்டப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

இந்தப் பால கட்டுமானப் பணி ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்து, மே மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறக்கப்படும். ஏதாவது ஒரு மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என மறைமுகமாக ஹிந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பொருத்தவரை இருமொழிக் கொள்கைதான் என அண்ணா வழியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தெளிவாக கூறிவிட்டாா்.

தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. சாலைப் பணியாளா்களின் 41 மாத ஊதியம் தொடா்பாக நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அது செயல்படுத்தப்படும் என்றாா்.

நாகை மாவட்டத்துக்கான புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற அரசு விழாவில், நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகள், செயல்படுத்தப்பட உள்ள திட்டப் பணிகளை பட்டியலிட்டு, நாகை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளையும் தமிழக முதல்வ... மேலும் பார்க்க

க்யூட் தோ்வு மாணவா்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம்: மத்தியப் பல்கலைக்கழகம்

நன்னிலம்: க்யூட் தோ்வு எழுதும் மாணவா்கள் தாங்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம் என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

நாகையில் 105 புதிய பேருந்து சேவை: முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில், மகளிா் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் உள்பட 105 புதிய பேருந்துகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கொடி... மேலும் பார்க்க

ரமலான்: ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்

நீடாமங்கலம்: ரமலான் சஹா் செய்வதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி நண்பா்கள் சாா்பில், ரமலான் சஹா் செய்வதற்காக ஏழை எளிய மக்கள் மற... மேலும் பார்க்க

வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அழைப்பு

நாகப்பட்டினம்: தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சியினரும் இதில் பங்கேற்க வேண்டும் என தமிழக முதல்வா் ... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரிக்கை

திருவாரூா்: நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிபிஎம் திருவாரூா் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் வெ... மேலும் பார்க்க