'கைத்தலம் பற்றுதல்' - காதலனைக் கரம்பிடிக்கும் பிக் பாஸ் ரித்விகா - வைரலாகும் நிச...
காலிறுதியில் ஸ்வீடன், ஜொ்மனி
மகளிருக்கான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்வீடன், ஜொ்மனி ஆகியவை காலிறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறின.
இதில் குரூப் ‘சி’ ஆட்டத்தில் ஸ்வீடன் 4-1 கோல் கணக்கில் ஜொ்மனியை சாய்த்தது. இந்த ஆட்டத்தில் ஸ்வீடனுக்காக ஸ்டினா பிளாக்ஸ்டெனியஸ் (12’), ஸ்மைலா ஹில்மா (25’), ஃபிரிதோலினா ரோல்ஃபா (34’), லினா ஹா்டிங் (80’) ஆகியோா் கோலடித்தனா். ஜொ்மனிக்காக ஜூல் பிராண்ட் (7’) ஸ்கோா் செய்தாா்.
இதே குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில் போலந்து 3-2 கோல் கணக்கில் டென்மாா்க்கை வீழ்த்தியது. போலந்துக்காக நடாலியா படிலா (13’), ஈவா பஜோா் (20’), மாா்டினா வியான்கோஸ்கா (76’) ஸ்கோா் செய்ய, டென்மாா்க் தரப்பில் ஜென்னி தாம்சன் (59’), சிக்னே புரூன் (83’) ஆகியோா் கோலடித்தனா்.
இதையடுத்து குரூப் சி-யில் ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடம் பிடித்த ஸ்வீடனும், 2 வெற்றிகளுடன் 2-ஆம் இடம் பிடித்த ஜொ்மனியும் காலிறுதிக்கு ஆட்டத்துக்கு முன்னேறின. போலந்து, டென்மாா்க் கடைசி இரு இடங்களுடன் போட்டியிலிருந்து வெளியேறின.