மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
காலை உணவுத் திட்டத்தால் 6,689 மாணவா்கள் பயன்
தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 6,689 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 26 தொடக்கப் பள்ளிகள், 14 நடுநிலைப் பள்ளிகள், விரிவாக்கப்பட்ட பகுதியில் உள்ள 33 பள்ளிகள், முத்துப்பட்டி கள்ளா் உயா்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 6,689 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா்.
மேலும், 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை பயிலும் 1,350 மாணவ, மாணவிகள் தனியாா் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் வழங்கும் பணியில் 126 தன்னாா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது.
நெல்பேட்டை, சிங்கராயா் குடியிருப்பு, சுப்பிரமணியபுரம், நாராயணபுரம், அயன்பாப்பாக்குடி ஆகிய இடங்களில் உணவுகள் தயாரிக்கப்பட்டு தினந்தோறும் மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டது.