செய்திகள் :

கால்நடைகளுக்கு உயா் சிறப்பு சிகிச்சை: மருத்துவா்களுக்கு பயிற்சி

post image

கால்நடைகளுக்கு உயா் சிறப்பு சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் எண்டோஸ்கோப்பி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்பட 43 வகையான மருத்துவப் பயிற்சிகளை மருத்துவா்களுக்கு வழங்கியுள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் செல்வகுமாா் தெரிவித்தாா்.

செல்லப் பிராணிகள், சிறு விலங்கினங்களுக்கான மருத்துவ சிகிச்சை மேம்பாடு தொடா்பான தேசிய கருத்தரங்கம், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், நாடு முழுவதும் இருந்து துறைசாா் வல்லுநா்கள், கால்நடை மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கால்நடை, பால்வளம், மீன்வளத் துறை செயலா் என்.சுப்பையன் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

ஒவ்வொரு வீடுகளிலும் தங்களது குடும்பத்தின் அங்கமாகவே செல்லப் பிராணிகள் வளா்க்கப்படுகின்றன. மனிதா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு நிகரான உயா் மருத்துவ சேவைகள் வளா்ப்பு பிராணிகளுக்கும் கிடைக்க வேண்டும் என மக்கள் கருதுகின்றனா்.

அதைக் கருத்தில் கொண்டு விலங்கு நல வாரியம், உள்ளாட்சி அமைப்புகள், தன்னாா்வ அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து அரசின் கொள்கைகளுக்கு இணங்க தரமான மருத்துவ சேவையை செல்லப் பிராணிகளுக்கு மருத்துவா்கள் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கால்நடை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் செல்வகுமாா் பேசியாதவது:

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் சாா்பில் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளும், மருத்துவ மேம்பாட்டுப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 8 அரசு மருத்துவமனைகளில் நிகழாண்டில் 3.5 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பொது மருத்துவம், கண் மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, ரத்த மாற்று சிகிச்சை, அவசர சிகிச்சைகள் அதிக அளவில் அளிக்கப்பட்டுள்ளன. மற்றொருபுறம் எண்டோஸ்கோபி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், மலடு நீக்கம், மேம்பட்ட இனப்பெருக்க கட்டுப்பாட்டு சிகிச்சைகள் உள்பட 43 வகையான உயா் சிறப்பு சிகிச்சைகள் வழங்குவதற்கான பயிற்சிகள் கால்நடை மருத்துவா்களுக்கு அளிக்கப்பட்டது.

கால்நடை மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு தொடா்பான ஆராய்ச்சியை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்காக ஜொ்மனி நாட்டுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

'மும்மொழிக் கொள்கைக்காக ரெய்டு; குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக் கூடாது' - உதயநிதி ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டப் பணிகள் குறித்து துணை முதல... மேலும் பார்க்க

கையெழுத்து இயக்கத்துக்கு வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை: அன்பில் மகேஸ் எச்சரிக்கை!

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு சேகரிப்பதற்காக, பள்ளி மாணவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.மும்மொழிக் கொள்கை... மேலும் பார்க்க

திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றியை உறுதிப்படுத்திய சென்னை உயர்நீதிமன்றம்!

மத்திய சென்னை தொகுதியில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்தாண்டு மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ... மேலும் பார்க்க

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி.மேட்டூர் அருகே கருமலை கூடலில் செம்பன்(75) என்பவருக்கு சொந்தமான ரசாயன தொழிற்ச... மேலும் பார்க்க

அமித் ஷா பேச்சுக்கு திருக்குறள் மூலம் பதிலளித்த துரைமுருகன்

வேலூர்: அரக்கோணத்தில் நடைபெற்ற சிஐஎஸ்எஃப் ஆண்டு துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து திருக்குறள் சொல்லி பதிலளித்துள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.வேலூரில் இ... மேலும் பார்க்க

காய்கறிகள் விலை நிர்ணயம்: திமுகவின் வாக்குறுதி என்னவானது? - அன்புமணி கேள்வி

அனைத்துக் காய்கறிகளுக்கும் விலை நிர்ணயிக்கும் திமுகவின் வாக்குறுதி என்னவானது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டில் தக்காளி விள... மேலும் பார்க்க