Seeman: `தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான்..!' - திருமுருகன் காந்தி காட்டம்
கால்பந்து வீரரின் மனைவிக்கு அவதூறு செய்திகள் அனுப்பிய சிறுவன் கைது!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆர்சனல் எனும் கால்பந்து கழக அணியின் வீரர் கய் ஹவர்ட்ஸின் மனைவிக்கு சமூக ஊடகத்தில் அவதூறு மற்றும் மிரட்டல் செய்தி அனுப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டார்.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கய் ஹவர்ட்ஸ் இங்கிலாந்தின் பிரபல் கால்பந்து விளையாட்டு கழகமான ’ஆர்சனல்’ அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜன.12 அன்று மான்செஸ்டர் அணியுடனான போட்டியில் ஆர்சனல் அணி தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் வெற்றியடைய கிடைத்த வாய்ப்பை கை ஹாவர்ட்ஸ் நழுவவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், விரக்தியடைந்த அந்த அணியின் ரசிகரான வட லண்டன் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கை ஹவர்ட்ஸின் மனைவியான சோபியா ஹாவர்ட்ஸ்க்கு சமூக ஊடகத்தில் அவதூறு செய்திகள் அனுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: புதின் பேச்சுக்கு வராவிட்டால் கூடுதல் பொருளாதாரத் தடை: டிரம்ப்
மேலும், கர்ப்பமாக இருக்கும் சோபியாவின் குழந்தைக்கு சிலர் கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த செய்திகள் குறித்து சோபியா தனது சமூக ஊடகக் கணக்கில் பகிர்ந்ததைத் தொடர்ந்து அந்த செய்திகள் அனுப்பிய சிறுவனை கண்டுபிடித்த அந்நாட்டு காவல் துறையினர் அவனை கைது செய்தனர். தற்போது அவன் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.