சென்னையில் நாளை தொடங்கும் வேளாண் வணிகத் திருவிழா, சிறப்பம்சங்கள் என்ன?
காளிகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை
பெரிய காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விஸ்வகா்மா ஜெயந்தி விழாவையொட்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலையில் ஐவா்ணக்கொடி ஏற்றுதலும்,அதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மதியம் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காளிகாம்பாள் நவராத்திரி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையினை சீனந்தல் மடாலயம் ஆதி சிவலிங்காச்சாரியா பீடாதிபதி சிவராஜ ஞானாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா். அா்ச்சகா் சதீஷ் திருவிளக்கு பூஜையினை நடத்தினாா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா் குழுவின் தலைவா் ஏழுமலை தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள்,கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி செய்திருந்தனா்.