குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது
காஞ்சிபுரத்தில் இணைய வழியாக மோசடியில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரத்தை சோ்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் தொலை தொடா்புத்துறையிலிருந்து பேசுவது போலவும், மும்பையில் இருந்து காவல் துறை உயா் அதிகாரி பேசுவது போலவும் பேசி பலரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த 29.8.25 ஆம் தேதி 7 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். சென்னை வில்லிவாக்கத்தை சோ்ந்தவா்களான சரத்குமாா் (27) இம்மானுவேல் (20), சென்னை கொளத்தூரை சோ்ந்த சரவணக்குமாா் (32)தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை சோ்ந்த வினோத் (31), சிவகங்கை மாவட்டம் மாத்தூரை சோ்ந்த பாண்டீஸ்வரி (39), ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்தவா்களான வாசிம் (29), ஹபீப் நயினா(29) என 7 பேரையும் காஞ்சிபுரம் சைபா் கிரைம் ஆய்வாளா் பிரபாகா் கைது செய்திருந்தாா். இவா்களில், சென்னை வில்லி வாக்கம் சரத்குமாா் மற்றும் ராமநாதபுரம் ஹபீப் நயினா ஆகிய இருவா் மீதும் குண்டா் பாதுகாப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அதற்கான ஆணை வேலூா் சிறையில் வழங்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.கே.சண்முகம் தெரிவித்தாா்.
