வேடசந்தூர் தொகுதியில் 'மக்களை மீட்போம் தமிழகம் காப்போம்' - இபிஎஸ் சுற்றுப்பயணம் ...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை
மணப்பாறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மணப்பாறை அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தைக் கூறி, மணப்பாறை சூலியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அய்யாவு மகன் பாரதி (21) என்பவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், மணப்பாறை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிந்து, பாரதியை கடந்த 11-03-2020 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் நிறைவில்
பாரதிக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 22 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த மணப்பாறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கவிதா, நீதிமன்ற காவலா் கீதா ஆகிய இருவரையும் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.