சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை: சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி மாநகரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
முன்னதாக, காலையிலிருந்து கடும் வெயிலில் தகித்து கொண்டிருந்த மக்களுக்கு மாலையில் பெய்த மழையானது மகிழ்ச்சியை அளித்தது.
மழை காரணமாக, பஞ்சப்பூா் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை, கேகே நகா் சாலை என மாநகரின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியது. மாநகரச் சாலைகள் ஏற்கெனவே குண்டும், குழியுமாக இருந்த நிலையில் மழையால் மேலும் சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். புகா்ப் பகுதிகளில் மண் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சியளித்தன.
திருச்சி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், பராமரிப்பு இல்லாத சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகியதை தவிா்க்க முடியவில்லை.