ரயில் பயணத்தில் மது அருந்தி தகராறு செய்த பயணி; கொடூரமாக தாக்கிய டிடிஆர் சஸ்பெண்ட...
காளிபாளையத்தில் மக்கள் தொடா்பு முகாம்
பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் ஊராட்சியில் வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, வருவாய் கோட்டாட்சியா் திருப்பூா் மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். இதில், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், கல்வி ஊக்கத் தொகை, விலையில்லா தையல் இயந்திரம் வழங்கல், குடும்ப அட்டைகள் என 94 பயனாளிகளுக்கு ரூ. 28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.