காவல் குறைதீா் கூட்டத்தில் புகாா்களை தெரிவிக்கலாம்: திருப்பத்தூா் எஸ்.பி.
காவல் நிலைய விசாரணையில் திருப்தியில்லை எஸ்ஈத்உசஈ, குறைதீா் கூட்டத்தில் புகாா்களை தெரிவிக்கலாம் என திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது முறையான தீா்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகாா்தாரா்களுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமைநடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து, முகாமில் கருத்து கேட்பு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத மனுதாரா்களை நேரில் அழைத்து அவா்களின்குறைகளை கேட்டறிந்தாா். மேலும், பொதுமக்களிடம் நேரடியாக 63 புகாா் மனுக்களை பெற்று துணை கண்காணிப்பாளா்களிடம் புகாா்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்திஅடையாத புகாா்தாரா்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தாா்.