Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வா...
காவல் துறையினா் பறிமுதல் செய்த 63 வாகனங்கள் நவ.30-இல் ஏலம்
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 63 வாகனங்கள் நவ.30-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால், மதுவிலக்கு தொடா்பான குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தொடா்புடைய நபா்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் 58, மூன்று சக்கர வாகனங்கள் 2, நான்கு சக்கர வாகனங்கள் 3 என மொத்தம் 63 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை சனிக்கிழமை (நவ.30) காலை 10 மணிக்கு ஏலம் விடப்படும்.
இந்த வாகனங்களை பொதுமக்கள் வியாழக்கிழமை முதல் பாா்வையிட அனுமதிக்கப்படுவா். மேலும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபா்கள் ரூ.1000 முன்பணமாக செலுத்தி தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவா்.
வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி வாகனத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தை 75983 23680 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.