செய்திகள் :

காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை உருவாக்க காங்கிரஸ் கூட்டணி திட்டம்!

post image

காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை அமைக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

சத்திரபதி சம்பாஜி நகரில் பேரணியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது,

பாகிஸ்தான் மொழியைப் பேசும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மகாராஷ்டிர மக்கள் ஆதரிப்பார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீரில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரும் விரும்புகிறார்கள்.

பாஜக தலைமையிலான மஹாயுதி அரசு, அவுரங்காபாத்தை சத்ரபதி சம்பாஜிநகர் எனப் பெயர் மாற்றம் செய்து, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் விருப்பத்தை நிறைவேற்றியதாகவும் மோடி கூறினார்.

இந்த நகரத்தை சத்ரபதி சம்பாஜிநகர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பாலாசாகேப் தாக்கரேவால் எழுப்பப்பட்டது என்பது முழு மகாராஷ்டிராவுக்கும் தெரியும். இந்த முடிவை ரத்து செய்ய காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாடியது.

மகாவிகாஸ் அகாதி அரசு இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தது. ஆனால் காங்கிரஸின் அழுத்தத்தால் நகரத்தின் பெயரை மாற்றும் தைரியம் அதற்கு இல்லை என்றார்.

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல.

இந்தத் தேர்தலில் ஒருபக்கம் சாம்பாஜி மகாராஜாவை நம்பும் தேசபக்தர்களும் மறுபுறம் அவுரங்கசீப்பைப் புகழ்ந்து பேசுபவர்களும் உள்ளனர்.

மஹாயுதி இருந்தால் மகாராஷ்டிரத்தில் முன்னேற்றம். மராத்திக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர மற்றும் மராத்வாடா மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

பிரதமா் மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது: ஆம் ஆத்மி

தில்லி வக்ஃப் வாரிய பணமுறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக என ஆம் ஆத்மி தெரிவ... மேலும் பார்க்க

நேரு பிறந்த தினம்: பிரதமா், தலைவா்கள் மரியாதை

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 135-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் அவருக்கு... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: துணை மாவட்ட ஆட்சியரை அறைந்த சுயேச்சை வேட்பாளா் கைது -வன்முறையால் பதற்றம்

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் நடைபெற்ற பேரவை இடைத்தோ்தலின்போது துணை மாவட்ட ஆட்சியரை கன்னத்தில் அறைந்த சுயேச்சை வேட்பாளா் நரேஷ் மீனாவை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். மீனாவின் கைத... மேலும் பார்க்க

பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அறிமுகம்!

இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுசிஜி)தலைவா் எம்.ஜெகதீஷ் குமாா் தெரிவித்தாா். பல்கலைக்கழக மானியக்குழ... மேலும் பார்க்க

புதிய மைல்கல்லில் இந்தியா-யுஏஇ உறவு: ஜெய்சங்கா்

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவில் இருதரப்பு உறவுகள் வலுவடைந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா். துபையில் சிம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் ஊராட்சித் தலைவரை நீக்கும் உத்தரவு: உச்சநீதிமன்றம் ரத்து

சத்தீஸ்கரில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யவில்லை என்று பெண் ஊராட்சித் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு சத்தீஸ்கா் மாநிலம் ஜஷ்... மேலும் பார்க்க