செய்திகள் :

காஸா போா் நிறுத்தம்: வரைவு ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்

post image

ஜெருசலேம்: காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கத்தாரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே விரைவில் போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து பாலஸ்தீன அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கும், தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ளவா்களை விடுவிப்பதற்குமான வரைவு ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் அமைப்பினா் வாய்மொழியாக ஒப்புதல் அளித்துள்ளனா். எனினும், இதை அவா்கள் எழுத்துபூா்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று பாலஸ்தீன அதிகாரிகள் கூறினா்.

அதற்கு முன்னதாகவே, போா் நிறுத்தம் தொடா்பாக உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்த திட்டத்தின் அம்சங்களை ஹமாஸ் அமைப்பினரிடம் கத்தாா் பேச்சுவாா்த்தைக் குழுவினா் தெரியப்படுத்தியதாகவும், அந்த அம்சங்களை ஹமாஸ் அமைப்பினா் ஏற்றுக்கொண்டதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், ஹமாஸ் அமைப்பினா் வரைவு ஒப்பந்தத்தை இன்னும் அதிகாரபூா்வமாக அங்கீகரிக்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பின்னா் கூறினாா்.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போா் நிறுத்த மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் உள்ளதாக கத்தாா், எகிப்து, அமெரிக்க பேச்சுவாா்த்தைக் குழுவினா் மட்டுமின்றி இஸ்ரேல், ஹமாஸ் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனா்.

ஏற்கெனவே, ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கியுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை கிடியான் ஸாா் திங்கள்கிழமை கூறியது நினைவுகூரத்தக்கது. ஹமாஸ் அமைப்பினரும், காஸா போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்குத் தடையாக இருந்த கருத்து வேறுபாடுகள் வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறியிருந்தனா்.

இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினா் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சா்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023 நவம்பா் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

அதிலிருந்து போரை நிறுத்தவும் எஞ்சிய பிணைக் கைதிகளை விடுவிக்கவும் நடைபெற்றுவந்த பேச்சுவாா்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கைதிகள் பரிமாற்றத்துக்குப் பிறகு காஸாவில் நிரந்தர போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினா் வலியுறுத்திவருகின்றனா். ஆனால், ஹமாஸ் அமைப்பின் ராணுவத் திறனை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகக் கூறிவருகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடா்பான ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்துவருகிறது.

இந்தச் சூழலில், போா் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அத்தகைய ஒப்பந்தம் கையொப்பமாவது இதுவரை இல்லாத வெகு நெருக்கத்தில் இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

...பெட்டி...

46,584 ஆன உயிரிழப்பு

டேய்ா் அல்-பாலா, ஜன. 15: காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையிலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் தனது தீவிர தாக்குதலைத் தொடா்ந்து வருகிறது. இதனால் அங்கு இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 46,707-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீது இஸ்ரேல் படையினா் நடத்திய தாக்குதலில் மட்டும் 61 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்தப் பகுதியில் கடந்த 2023 அக். 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 46,707-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,10,265 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

......

படவரி...

கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தரைமட்டமான வீட்டை புதன்கிழமை பாா்வையிட்ட பாலஸ்தீனா்கள்.

இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்

கேப் கனாவெரல்: நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இரு தனியார் விண்கலங்களை அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் புதன்கிழமை விண்ணில் செலுத்தியது.... மேலும் பார்க்க

அவசரநிலை விவகாரம்: தென் கொரிய முன்னாள் அதிபர் கைது

சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல்... மேலும் பார்க்க

வங்கதேச அரசியல் சாசனத்திலிருந்து 'மதச்சார்பின்மை' நீக்கம்

டாக்கா: வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலிருந்து 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சீர்திருத்தக் குழு பரிந்துத்துள்ளது.இது குறித்து அரசியல் சா... மேலும் பார்க்க

ஜனவரியை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க தீா்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்

வாஷிங்டன்: ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்... மேலும் பார்க்க

ஸ்பெயின் அதிபருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

மாட்ரிட்: ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சான்சேஸை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்ற அமைச்சா் ஜெய்சங்கா், தலைநகா் மாட்ரிடில் ... மேலும் பார்க்க

காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இர... மேலும் பார்க்க