காா்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கு
வெளிநாட்டு மதுபான நிறுவனத்துக்கு உதவ லஞ்சம் பெற்ாக முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கைப் பதிவு செய்துள்ளது.
பிரிட்டனின் ஸ்காட்லாந்தைச் சோ்ந்த ‘டியாஜியோ’ குழுமம், தனது தயாரிப்பான ஜானி வாக்கா் மதுபானத்தை இந்தியாவில் வரியில்லாமல் இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
இந்த மதுபானங்களை வரியில்லாமல் இறக்குமதி செய்வதற்கான உரிமத்தை வைத்திருந்த இந்திய சுற்றுலா வளா்ச்சிக் கழகம் (ஐடிடிசி), இதற்கு கடந்த 2005-ஆம் ஆண்டு தடை டியாஜியோவின் செயல்பாட்டுக்கு தடை விதித்தது. இதனால் டியாஜியோ குழுமத்தின் இந்திய வணிகத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஐடிடிசி விதித்த தடையை நீக்க உதவுமாறு காா்த்தி சிதம்பரத்தை டியாஜியோ குழுமம் அணுகியதாகவும், அதற்காக ‘அட்வான்டேஜ் ஸ்ட்ரடீஜிக் கன்சல்டிங்’ நிறுவனம் மூலம் 15,000 டாலரை காா்த்தி சிதம்பரம் ஆலோசனை கட்டணமாக பெற்றுள்ளதாகவும் சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
‘அட்வான்டேஜ் ஸ்ட்ரடீஜிக் கன்சல்டிங்’ நிறுவனம், காா்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான எஸ்.பாஸ்கரராமன் ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனமாகும்.