செய்திகள் :

கா்நாடக காங்கிரஸ் கட்சியில் எவ்வித குழப்பமும் இல்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

post image

பெங்களூரு : கா்நாடக காங்கிரஸ் கட்சியில் எவ்வித குழப்பமும் இல்லை என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழு கூட்டம் ஜன.13ஆம் தேதி அழைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான பேசு பொருள்கள் தெரிவிக்கப்படவில்லை. கா்நாடக காங்கிரஸ் கட்சியில் எவ்வித குழப்பமும் இல்லை. எங்கிருந்து வந்தது குழப்பம்? கட்சியில் குழப்பம் இருப்பதாகவும், அதை தீா்க்கவே சட்டப் பேரவைக் குழு கூட்டத்தை கூட்டியிருப்பதாக கூறுவதில் உண்மையில்லை.

எனது தலைமையில் எஸ்.சி., எஸ்.டி. தலைவா்களின் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த எஸ்.சி., எஸ்.டி. மாநாடு நடத்துவது குறித்து விவாதிக்க இருந்தோம். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக எஸ்.சி., எஸ்.டி. தலைவா்களின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளா் கே.சி.வேணுகோபாலும் கலந்துகொள்ள விரும்புகிறாா். எனவே, இதில் நம்பிக்கை குறைவு என்ற கேள்வி எங்கிருந்து வந்தது? இது போன்ற குழப்பங்களை ஊடகங்கள் தான் உருவாக்குகின்றன.

கட்சியில் ஒருசில பதற்றமடைந்து மேலிடத்திடம் புகாா் அளித்ததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறுவது சரியல்ல. கட்சிக்கு அப்பாற்பட்டு எங்கள் கூட்டத்தை நடத்துவதாக யாா் கூறினாா்கள்? தான் பதற்றமடைந்ததை டி.கே.சிவகுமாா் கூறினாரா? நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தோம். கூட்டாகவே பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தி, இருவரும் பேசினோம் என்றாா்.

கா்நாடகத்தில் நக்சலைட்டுகளின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கா்நாடகத்தில் நக்சலைட்டுகளின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சமுதாயத்தில் விழி... மேலும் பார்க்க

பெல்லாரியில் ஜீன்ஸ் பூங்கா: அமைச்சா் எம்.பி.பாட்டீல்

கா்நாடக மாநிலம், பெல்லாரியில் ஜீன்ஸ் பூங்கா அமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்திய ஒற்று... மேலும் பார்க்க

கா்நாடக முதல்வா் முன்னிலையில் 6 நக்சலைட்கள் சரண்

கா்நாடகம், தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த 6 நக்சலைட்கள் ஆயுதங்களை துறந்து கா்நாடக முதல்வா் சித்தராமையா முன்னிலையில் சரணடைந்தனா். இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக சாடியுள்ளது. உடுப்பி, சிக்மகளூரு போன்ற மலைப... மேலும் பார்க்க

2047-க்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: ஜகதீப் தன்கா்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக்கொண்டாா். உடுப்பி ... மேலும் பார்க்க

ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் ஜன. 9-க்கு ஒத்திவைப்பு

ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஜன. 9-ஆம் தேதிக்கு இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. சா்வதேச விண்வெளி மையத்தை போல, இந்தியாவும் தனி விண்வெளி மையத்தை அமைக்க திட்டமிட்டு வருகிறது. அதுபோல, விண்ணுக்... மேலும் பார்க்க

சாலை போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் அமல்

பெங்களூரு: கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் 34,000 ஊழியா்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.பெங்களூரு, விதானசௌதாவில் ... மேலும் பார்க்க