மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
2047-க்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: ஜகதீப் தன்கா்
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக்கொண்டாா்.
உடுப்பி மாவட்டத்தின் தா்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘ஸ்ரீசானித்யா’ என்ற நாட்டின் மிக நீண்ட வரிசையில் நிற்கும் வளாகத்தை திறந்துவைத்து அவா் பேசியதாவது: ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வரிசையில் நிற்பதற்கு தேவையான நவீன வசதிகளை செய்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். பக்தா்களின் நலனில் கோயில் நிா்வாகம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதை இது உணா்த்துகிறது.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த இலக்கு நிா்ணயித்து பயணித்து வருகிறது. அந்த இலக்கை அடைவதற்கு அரசியல் கருத்து முரண்பாடுகள், இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் உழைக்க வேண்டும்.
வளா்ந்த இந்தியா என்பது இனிமேலும் கனவாக இல்லாமல், இலக்காக மாற வேண்டும். அதை நோக்கி நமது சிந்தனைகளை செலுத்த வேண்டும். இதற்கு இடையூறாக இருந்து வரும் பிரிவினை சக்திகளை அடையாளம் காண வேண்டும். பிளவு சிந்தனைகளை விதைத்து, தவறான தகவல்களை பரப்பி வரும் இந்திய நாட்டுக்கு எதிரான சக்திகளை ஒடுக்க வேண்டும்.
எல்லோரையும் அரவணைத்துச் செல்லும், எல்லோரின் நலனிலும் அக்கறைக் கொண்ட நமது நாட்டின் நற்பெயரைக் காக்கவும், ஜனநாயகத்தை பலப்படுத்தவும், நாட்டுக்கு எதிராக செயல்படுவோரின் செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.