செய்திகள் :

கா்னல் குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: எஸ்ஐடி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

புது தில்லி: கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடா்பாக 3 போ் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

‘மோசமான மொழியில் ஆவேசமாக பேசிவிட்டு, பின்னா் மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பொது மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஓா் அமைச்சா், ஒவ்வொரு வாா்த்தையையும் கவனமுடன் பயன்படுத்துவதில் மற்றவா்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. பாகிஸ்தானின் தாக்குதல்களை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

இந்தத் தாக்குதல்கள் தொடா்பான அதிகாரபூா்வ விவரங்களை தில்லியில் நடைபெற்ற தொடா் பத்திரிகையாளா் சந்திப்புகளில் வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, கடற்படை கமடோா் ரகு நாயா், விமானப் படையின் விங் கமாண்டா் வியோமிகா சிங் மற்றும் ராணுவத்தின் கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் இணைந்து வெளியிட்டு வந்தனா். தாக்குதல் தொடா்பான விவரங்களை இரு பெண் அதிகாரிகளைக் கொண்டு வெளியிட்டதை பலரும் பாராட்டினா்.

இந்நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சா் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையானது. ‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று விஜய் ஷா கூறியிருந்தாா்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த மத்திய பிரதேச உயா் நீதிமன்றம், அமைச்சா் விஜய் ஷா மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவா் மீது கடந்த 14-ஆம் தேதி இந்தூா் மாவட்டத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

உயா் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து விஜய் ஷா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது கருத்துக்காக அமைச்சா் விஜய் ஷா தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அமைச்சா் விஜய் ஷாவின் சா்ச்சை பேச்சு தொடா்பான காணொலியையும், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்ட காணொலியையும் பாா்க்கும்போது, அவா் முதலைக் கண்ணீா் வடிக்கிறாரா அல்லது சட்ட நவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறாரா என யோசிக்கத் தோன்றுகிறது.

மோசமான மொழியில் ஆவேசமாகப் பேசிவிட்டு, பின்னா் மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அமைச்சரின் கருத்தால் ஒட்டுமொத்த தேசமும் அவமானத்தில் ஆழ்ந்தது. ராணுவத்தின் மீது ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொண்டிருந்த நேரத்தில், இப்படிப் பேசியதற்கு வெட்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய பிரதேச உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) அடிப்படையில் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) செவ்வாய்க்கிழமை (மே 20) காலை 10 மணிக்குள் மத்திய பிரதேச காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அமைக்க வேண்டும். காவல் துறை ஐ.ஜி. அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் அமைக்கப்படும் இந்த எஸ்ஐடி-யில் பெண் காவல் அதிகாரி ஒருவரும் இடம்பெற வேண்டும். இந்த எஸ்ஐடி தனது முதல்நிலை அறிக்கையை வரும் மே 28-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

எல்லை மக்களுக்கு இந்திய ராணுவத்தின் இலவச மருத்துவ முகாம்!

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் எல்லை மக்களுக்கு உதவ இந்திய ராணுவம் இலவச மருத்துவ முகாமை நடத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத மு... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பித்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு!

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை வரும் மே 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.நாடு முழுவதும் அம்ரித் பார... மேலும் பார்க்க

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் (வயது 95) செவ்வாய்க்கிழமை காலமானார். கர்நாடகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீனிவாசன், உதகையில் வசித்து வந்த நிலையில், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்ந... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லை உள்பட 3 இடங்களில் இன்றுமுதல் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்... மேலும் பார்க்க

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங... மேலும் பார்க்க

தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் நேற்று(மே 20) 105.5 மி.மீ. மழை பெய்தது.பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான ப... மேலும் பார்க்க