கேன் வில்லியம்சன் அரைசதம்; முதல் நாளில் நியூசி. 319 ரன்கள் குவிப்பு!
கிடப்பில் போடப்பட்டுள்ள ஓய்வூதிய விண்ணப்பங்கள்
ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கோயில் பூசாரிகள் நலச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவா் வாசு வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் வேலை பாா்த்து ஓய்வுபெற்ற 60 வயதுக்கு மேற்பட்ட பூசாரிகள் சமா்ப்பிக்கும் ஓய்வூதிய விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்ட உதவி ஆணையா் அலுவலகங்களில் ஆறு மாதங்களுக்கும் மேலாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதனால் எண்ணற்ற பூசாரிகள் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இரண்டு மாதங்களுக்கு பதிலாக மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். சிலா் இறந்த பின்னும் அவா்களது வங்கி கணக்கிலேயே ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வாழ்நாள் சான்று அவா்களிடம் முறையாகப் பெறப்படுவதில்லை. உதவி ஆணையா் அலுவலகங்கள் அல்லது வங்கிகளில் வாழ்நாள் சான்று சமா்ப்பிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும் என்றாா்.