செய்திகள் :

கின்னஸ் சாதனைப் படைத்தார் டாம் க்ரூஸ்!

post image

மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்த ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின், அதிரடியான சண்டைக் காட்சிகளினாலே உலகளவில், மிஷன்: இம்பாஸிபிள் திரைப்படங்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன.

இந்தப் படங்களுக்கென்று, தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ள நிலையில், சமீபத்தில் இந்தப் பட வரிசையில் 8வது பாகம் வெளியாகி சர்வதேச அளவில் மிகப் பெரிய வசூலைக் குவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது வெளியான மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் கின்னஸ் சாதனையிலும் டாம் க்ரூஸ் இடம்பிடித்துள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகனான அவர், தீயில் எரியும் பாரசூட்டின் மூலம் உயரத்திலிருந்து குதிக்கும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

படத்தில்...

இதன்மூலம், சுமார் 16 முறை அவர் எரியும் பாராசூட்டிலிருந்து குதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிக முறை எரியும் பாராசூட்டிலிருந்து குதித்த நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்தப் பிரத்யேக சண்டைக் காட்சியை, படக்குழு தென் ஆப்பிரிக்கா நாட்டின் டிராகென்ஸ்பெர்க் நகரத்தில் படம் பிடித்துள்ளனர். சுமார் 75,000 அடி உயரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து டாம் க்ரூஸ் எரியும் பாராசூட்டின் மூலம் குதித்து, அதன் கயிறுகளை அறுத்து, மற்றொரு பாராசூட்டின் மூலம் தப்பிக்கும் படியான ஸ்டண்டுகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தியாவின் பாலிவுட் திரைப்படங்களைப் போன்று பாடல்களுடன் கூடிய படத்தை உருவாக்க நடிகர் டாம் க்ரூஸ் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:மன்னிப்புக் கேட்டால் தடை நீக்கம்... மறுத்த சின்மயி!

வாடிவாசல் கைவிடப்படுகிறதா? தயாரிப்பாளர் பதில்!

சூர்யா - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்.நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. மறைந்த எழு... மேலும் பார்க்க

ஆழப்புழா ஜிம்கானா ஓடிடி தேதி!

மலையாளத்தில் வெளியாகி கவனம் பெற்ற ஆழப்புழா ஜிம்கானா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், கணபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆழப்ப... மேலும் பார்க்க

அட்லி படத்தில் டிராகன்கள்?

இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி திரைப்படத்தில் நடிக்கிறார... மேலும் பார்க்க

குபேரா: டப்பிங் பணிகளை முடித்த நாகர்ஜுனா!

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா குபேரா படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் ராஷ்மிகா நாயகியாகவும் நடித்துள்ள... மேலும் பார்க்க

பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

கெங்கவல்லியில் பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கோவிலில் க... மேலும் பார்க்க

அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் தீபிகா படுகோன்!

இயக்குநர் அட்லீ இயக்கும் அல்லு அர்ஜுன் படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை விடியோவாக வெளியிட்டுள்ளார்கள். நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்திற்குப் பின் இயக்குநர் அல்லு அர்ஜுன் இயக்கத்தில் நடிக்... மேலும் பார்க்க