செய்திகள் :

கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்

post image

கிராமப்புற மக்களால் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை (ஜன. 27) காலை தொடங்கியது.

இந்த நிகழ்வில் ’வளர்ந்த இந்தியா 2047-ல் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் பங்கு’ என்ற தலைப்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சிவபிரசாத் ஆகியோர் உரையாற்றினர்.

இதையும் படிக்க : குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அரசியலமைப்பு! மணிப்பூர் எம்பி

சுதா சேஷய்யன் பேசியதாவது:

“ஒரு நோயாளிக்கு 30 மருத்துவர்களோ 30 பயிற்சியாளர்களோ இருக்க முடியாது; பொது மருத்துவம், குடும்ப மருத்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிப்படை விஷயங்களில் குறைபாடு இருப்பது தற்போது எனக்கு புரிந்துள்ளது.

கிராமப்புற மக்களால் சிறப்பு சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. குடும்ப மருத்துவ முறையை நாம் மீண்டும் கொண்டு வர வேண்டும்.

மருத்துவத்தில் செய்முறை மற்றும் அனுபவக் கற்றல் முறை தேவை” என்றார்.

சிவபிரசாத் பேசியதாவது:

“தற்போதைய காலகட்டத்தில், வேலை தேடுபவர்கள் குறைந்த வேலைக்கு அதிக ஊதியம் விரும்புகிறார்கள். இதனிடையே, முதலாளிகள் வாரத்தில் 90 மணிநேர வேலை வாங்க விரும்புகிறார்கள்.

இந்த இடைவெளியையும் பொருத்தமின்மையையும் நிரப்புவது ஆசிரியர்களின் பொறுப்பாகும்” என்றார்.

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 6 மீனவர்கள் சென்னை வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்கள் வியாழக்கிழமை காலை சென்னை வந்தடைந்தனர்.ராமேசுவரத்தில் இருந்து கடந்த 12 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை, எல்லை தாண்டி மீன... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜன.30, 31) கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி... மேலும் பார்க்க

வருவாய் - மீன்வளத் துறைகளுக்கு புதிய கட்டமைப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

வருவாய் மற்றும் மீன்வளத் துறைகளுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக புதிய கட்டடங்களை அவா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.... மேலும் பார்க்க

குற்றச் சம்பவங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அண்ணாமலை

தமிழகத்தில் நிகழ்ந்த குற்றச் சம்பவங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறி... மேலும் பார்க்க

அறுபடைவீடு முருகன் கோயில்களில் ரூ. 801 கோடியில் பணிகள்: அமைச்சா் சேகா்பாபு தகவல்

அறுபடைவீடு முருகன் கோயில்களுக்கு ரூ. 801.46 கோடியில் 275 பணிகளும், அறுபடைவீடு அல்லாத முருகன் கோயில்களுக்கு ரூ.284.17 கோடியில் 609 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சே... மேலும் பார்க்க

அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 உதவிப் பேராசிரியா்கள் தோ்வு

அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியா்கள் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் போட்டித் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படவுள்ளனா். இந்தத் தோ்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று... மேலும் பார்க்க