'கிராமுக்கு ரூ.9,000-க்கு வந்த தங்கம் விலை!' - இந்த இறங்குமுகம் தொடருமா?

நேற்றை விட, தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.80 ஆகவும் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,005 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.72,040 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.111 ஆகும்.
இந்த இறங்குமுகம் தொடருமா?

உலகளவிலான அரசியல் நிலவரங்கள், உலக பொருளாதார நிலவரங்கள் வைத்து பார்க்கும்போது தங்கம் விலையில் இந்த இறங்குமுகம் தொடர்வதற்கான அதிக வாய்ப்புகள் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.