மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல...
‘கிராம ஊராட்சியில் மாா்ச் 31-க்குள் வரி செலுத்த வேண்டும்’
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ளவா்கள் தங்களின் சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் மாா்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்துமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள், தங்கள் கிராம ஊராட்சிக்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி (வீட்டு வரி), குடிநீா் கட்டணம் உள்பட அனைத்து வரியினங்களையும் வரும் 31ஆம் தேதிக்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிலுவையின்றி இணைய வழியில் செலுத்தி உரிய கணினி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.