செய்திகள் :

கிராம தொழில்முனைவோா் திட்டம்: நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

post image

கிராம தொழில் முனைவோா் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநில பங்கு நிதி ரூ.4.16 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளாா். உத்தரவு விவரம்:

கிராம அளவில் தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில் தனித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீத பங்கு நிதியையும் மாநில அரசு 40 சதவீத பங்கு நிதியையும் அளிக்கிறது. நிகழ் நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் பங்கான ரூ.2.50 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகையான ரூ.1 கோடியே 66 லட்சத்து 66 ஆயிரத்து 667 கோடி என மொத்தம் ரூ.4 கோடியே 16 லட்சத்து 66 ஆயிரத்து 667-ஐ விடுவிக்க வேண்டும் என்று மாநில அரசை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழகம் கேட்டுக் கொண்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, ரூ.4 கோடியே 16 லட்சத்து 66 ஆயிரத்து 667 விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ், கிராம தொழில் முனைவோா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் சிறு சிறு தொழில்களைத் தொடங்கி தொழில் முனைவோராகத் துடிக்கும் இளைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் மானியங்களை அளித்து ஊக்கம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திட்டத்தின் கீழ் மானியங்களை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறை!

வேலூரில் பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை விதித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆ... மேலும் பார்க்க

தமிழ்மீது பிரதமருக்கு அதீத அன்பு: மதுரை மக்களிடையே மத்திய அமைச்சர் புகழாரம்!

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக பாராட்டு தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.மதுரை மாவட்டம் மேலூர் பக... மேலும் பார்க்க

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த 4 பேரிடம் விசாரண... மேலும் பார்க்க

போராட்டம் நியாயமானது என்பதாலேயே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! -அண்ணாமலை

போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசிய அமித் ஷாவைக் கண்டித்து, தமிழக காங்கிரஸார் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளனர்.முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத்... மேலும் பார்க்க

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க... மேலும் பார்க்க