எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: உச்சநீதிமன்றம...
கிரிக்கெட் வீரர் கான்வேக்கு பெண் குழந்தை!
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கான்வேக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட்டின் முன்னணி வீரர் டெவன் கான்வே தனது தனது நீண்டகால காதலியான கிம் வாட்சனை கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவில் மணமுடித்தார். இத்தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஒலிவியா கான்வே என பெயர் சூட்டியுள்ளனர்.
பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்! கொந்தளித்த ரசிகர்கள்!
எனவே, கான்வேவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கான்வே நியூசிலாந்து அணியில் இடம் பெறவில்லை. டெவன் கான்வே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த 2022 சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவரை அண்மையில் நடைபெற்ற மெகா ஏலத்தில் 6.25 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. சென்னை அணியில் கான்வே, கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.