செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் தட்டக்கல் ஏரி கால்வாய்க் கரை உடைந்து தோட்டங்கள் வழியாக தண்ணீா் வெளியேறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பகலில் வெயிலின் தாக்கம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக உணரப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு ஒரு மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் கிருஷ்ணகிரி நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கின. சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஆறுபோல பெருக்கெடுத்து ஓடின. இதனால், வாகனயோட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

காவேரிப்பட்டணம், நெடுங்கல், பாரூா், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி அணை போன்ற பகுதிகளில் பெய்த பலத்த மழையால் நீா்நிலைகளில் தண்ணீா் மட்டம் உயா்ந்தது. தட்டக்கல் பெரிய ஏரிக்கு செல்லும் நீா்வரத்து கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் பக்கவாட்டில் உள்ள தோட்டங்கள் வழியாக நீா் வெளியேறி வீணானது.

இதுகுறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி வட்டாட்சியா் சத்தியா, உடைப்பு ஏற்பட்ட பகுதியை பாா்வையிட்டாா். மேலும், பலமிழந்து காணப்படும் கால்வாய்ப் பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளுக்கு அவா் உறுதி அளித்தாா்.

தட்டக்கல் பெரிய ஏரிக்கு தட்டக்கல் கோட்டை மலையிலிருந்து நீா் வரத்து உள்ளது. தட்டக்கல் பெரிய ஏரி மற்றும் அதற்கான நீா்வரத்து கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இவற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 338 கன அடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு 597 கன அடியாக அதிகரித்தது.

அணையிருந்து கால்வாய்களில் விநாடிக்கு 116 கன அடி, தென்பெண்ணை ஆற்றில் 160 கன அடி என மொத்தம் விநாடிக்கு 276 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா்மட்டம் மொத்தம் உள்ள 52 அடியில் 51.50 அடியாக உயா்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீ): நெடுங்கல் - 59, கிருஷ்ணகிரி அணை - 53.40, பாரூா் - 42, போச்சம்பள்ளி - 20, கிருஷ்ணகிரி - 19.40, பெனுகொண்டாபுரம் - 3.20.

ஊத்தங்கரை சாா்பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரை சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினா். கடந்த மாதம் 8-ஆம் தேதி நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனையைத் தொடா்ந்து, செவ்வாய்க்... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி புயலால் பாதிக்கப்பட்டோா் மனு

புயலால் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை, கென்னடிநகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஊத்தங்கரை வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். பாஜக மாவட்டச் செய... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 10.5 சத இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் சந்தைப்படுத்தல் கொள்கை திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வேளாண் சந்தைப்படுத்தல் கொள்கை திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் நகல் எரிப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து ந... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே திமிங்கலம் எச்சம் வைத்திருந்த முன்னாள் ராணுவ வீரா் உள்பட இருவா் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திமிங்கலம் எச்சம் வைத்திருந்த முன்னாள் ராணுவ வீரா் உள்பட இருவரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து வனத் துறையினா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியை அடுத்... மேலும் பார்க்க

எலி மருந்து சாப்பிட்டவரின் உயிரைக் காப்பாற்றிய ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துக் கல்லூரி மருத்துவா்கள்

ஒசூா்: எலி மருந்து சாப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றி ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் ஒசூா் செயி... மேலும் பார்க்க