கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்: தேர் மீது மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி!
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தெலுங்கானா மாநிலம் ராமந்தபூரில் உப்பல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.
பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தபோது, தேர் மீது மின்கம்பி மீது உரசி விபத்து ஏற்பட்டது. இதில் கிருஷ்ணா(21), சுரேஷ்(34), ஸ்ரீகாந்த்(35), ருத்ரவிகாஸ்(39), ராஜேந்திரன்45) ஆகியோர் பலியாகினர்.
தேரோட்டம் நிறைவடைந்து, தேரை நிறுத்த முயற்சி செய்த போது, மின்கம்பியானது தேர் மீது உரசி விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்த 4 பேரும் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை! டிரம்ப் அறிவிப்பு