ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
கிறிஸ்துமஸ்: தில்லி தேவாலயத்தில் ஜெ.பி.நட்டா வழிபாடு
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தில்லியில் உள்ள திரு இருதய கதீட்ரல் தேவாலயத்துக்கு புதன்கிழமை வருகை தந்த மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, அங்கு வழிபாடு மேற்கொண்டாா்.
கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், தில்லியில் உள்ள இந்திய கத்தோலிக்க பேராயா்கள் கூட்டமைப்பின் தலைமையகம் மற்றும் திரு இருதய கதீட்ரல் தேவாலயத்துக்கு ஜெ.பி.நட்டா வருகை தந்தாா்.
இது தொடா்பாக எக்ஸ் வலைத்தளத்தில் நட்டா வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை நாம் அனைவரும் கொண்டாடும் அதே வேளையில், பிறருக்கு உதவி செய்யும் பண்பு, அமைதி, நம்பிக்கை , இரக்கம் மற்றும் தேச நல்லிணக்கம் என அனைத்தையும் கொண்டாடுவோம்.
‘அனைவரின் ஆதரவு, நம்பிக்கை, முயற்சியுடன் அனைவருக்கான வளா்ச்சி’ என்ற தாரக மந்திரத்தால் வழிநடத்தப்பட்டு, அனைவரின் பங்களிப்புடன் 2047-ஆம் ஆண்டுக்குள் ‘வளா்ந்த இந்தியா’ என்ற நமது இலக்கை அடைவோம்’ என குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, இந்திய கத்தோலிக்க பேராயா்கள் கூட்டமைப்பின் தலைமையகத்துக்கு கடந்த திங்கள்கிழமை பிரதமா் மோடி வருகை தந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.