குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி!
குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் நலமாக உள்ளார் என்று தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர்.
கரோனா பெருந்தொற்றுக்கு அடுத்ததாக சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக் கூடிய எச்எம்பிவி தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இதையும் படிக்க:திருப்பதி விபத்து: டிஎஸ்பி, தேவஸ்தான நிர்வாகிகள் இடைநீக்கம்!
இந்தத் தொற்று வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளாமலேயே குழந்தைகளைப் பாதிக்கிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்புகள். இந்த தொற்று பாதிப்பு குணமாக 3 முதல் 6 நாள்கள் வரை ஆகும்.
இணைநோய் உள்ளவர்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டால் ஓரளவு தீவிரத்தன்மை அடைந்து நுரையீரல் பாதிக்கப்படும்.
இந்தத் தொற்று பாதிப்புக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள் இல்லை. சுவாசநோய் தொற்றுகள் தானாகவே குணமடையும் என்பதால்தான், மருத்துவ வல்லுநர்கள் இதற்காக சிறப்பு சிகிச்சைகள் தேவை இல்லை என்கின்றனர்.
இந்தத் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் சென்னை, சேலத்தில் இருவர் பாதிக்கப்பட்டு, தற்போது கண்காணிப்பில் உள்ள இருவரும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.