செய்திகள் :

குஜராத்: சிறுத்தை தாக்கியதில் 7 வயது சிறுமி பலி!

post image

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 7 வயது சிறுமி பலியானார்.

அம்ரேலியின் சித்ரசார் கிராமத்திலுள்ள பருத்தி தோட்டத்தில் நேற்று (ஜன.12) மாலை வேலை செய்து வந்த அவரது பெற்றோருக்கு உதவி செய்வதற்காக 7 வயதுடைய சிறுமி ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தையொன்று அந்த சிறுமி மீது பாய்ந்து தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் சிறுமியின் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தின் ஜாப்ராபாத் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும், அந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக பலியானார்.

இதையும் படிக்க:2025 - 26 ல் நாட்டின் பணவீக்கம் 4.3% - 4.7% ஆக இருக்கும்: தகவல்

இந்த சம்பவம் அறிந்த ராஜுலா சட்டமன்ற உறுப்பினர் ஹிரா சோலன்கி, சிறுமியைத் தாக்கிய சிறுத்தையை உடனடியாகப் பிடிக்க வனத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வனத் துறையினர் 8 குழுக்கள் அமைத்து அப்பகுதியின் பல்வேறு இடங்களில் அந்த சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சிறுத்தைகளின் தாக்குதல் கடந்த சில காலமாக அதிகரித்து வருவதினால் கிராமவாசிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஜார்க்கண்ட்: அரசு ஊழியர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் மாநில அரசு ஊழியர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.போகாரோ மாவட்டத்தின் மதுகார்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிண்டு நாயக் (வயது 26) ... மேலும் பார்க்க

நாளைமுதல் 4 நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜன. 14-17 வரை மாற்றப்பட்டுள்ளது.இது பற்றி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது: 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணைய... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா: சிறிய ரக விமானம் விபத்து! விமானி பலி!

ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளனதில் அதனை ஓட்டி வந்த விமானி பலியானார்.அந்நாட்டின் டார்வின் மாகாணத்திலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள மறுசீரமைப்புப் பகுதியின் வானில் நேற... மேலும் பார்க்க

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருத... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் உள்பட 2 பேர் கைது!

சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.அம்மாநிலத்தின் மாவோயிஸ்டு அமைப்பின் பிரிவுக் குழு உற... மேலும் பார்க்க

சூது கவ்வும் - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சூது கவ்வும் - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அசோக் செ... மேலும் பார்க்க